சுடச் சுடச் செய்திகள்

போதை பாக்கு விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

சென்னை: தடை செய்யப்பட்ட போதை பாக்குகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா வேட்டை தீவிரம டைந்துள்ள நிலையில், இதற்காக சென்னையில் மட்டும் 135 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போதை பாக்குகள், புகை யிலைப் பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவ தாகக் கருதப்படும் இடங்களில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு உறை கள் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 19 முதல் 22ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் மட்டும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 722 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 750 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். “தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், மாவா விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம். “அதன் பேரில் உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்,” எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் பரவலாக விற்பனை செய்யப்படுவ தாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு காவல்துறை உயரதி காரிகள் சிலர் துணை போவதாக வும் சட்டப்பேரவையில் வைத்து அவர் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon