சுடச் சுடச் செய்திகள்

நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு மாணவர்கள் ஆதரவு

சென்னை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்நிலை யில் நெடுவாசல் மற்றும் கதிரா மங்கலம் கிராம மக்களுக்கு ஆதர வாக அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்களும் களமிறங்கி உள்ளனர். இரு திட்டங்களையும் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். நெடு வாசலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே போல் கதிராமங்கலத் திலும் மக்கள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. அப்பகுதி மக்க ளுக்கும் பல்வேறு தரப்பினர் ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் நடை பெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்களும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததுடன், கல்லூரியின் நுழைவாயிலில் திரளாக திரண்டு நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். இவ்விரு திட்டங்களால் சம்பந் தப்பட்ட பகுதிகளில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட மாணவர்கள், இதன் எதிரொலியாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்க நேரிடும் எனக் கவலை தெரிவித்தனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் அரசுக் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon