சுடச் சுடச் செய்திகள்

விஷால்: என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்

‘துப்பறிவாளன்’ திரைப்படம் தனக்காக இல்லை என்றாலும் அதில் நாயகனாக நடித்துள்ள விஷாலுக்காகவாவது வெற்றி பெற வேண்டும் என்கிறார் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்கி உள்ள இப்படத்தில் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின், ‘துப்பறிவாளன்’ காசுக்கு பின்னால் ஓடுகிற மனிதர் களைப் பற்றிய கதை என்றார். “ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறி வாளன் நடத்தும் போராட்டம்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் நடிக்க வந்த பிறகு விஷால் என் தம்பி ஆகி விட்டார்.

இன்று பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவன், இவன் என்று கூப்பிடும் உரிமையை எனக்கு கொடுத்திருக்கிறார். அதுதான் அவருடைய பெருந்தன்மை. “விஷாலுடன் எனக்கு அதிக பழக் கம் கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும்போது ஒரு ‘வணக்கம்’ சொல்வோம், அவ்வளவு தான். நான் பல வருடம் உழைத்து எழுதிய கதை ‘துப்பறிவாளன்’. இதற்கு விஷால் தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அவரி டம் கதை சொன்னதுமே எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள், வரு கிறேன் என்றார். அவரது ஒத்துழைப்பு அசாத்தியமானது,” என்றார் மிஷ்கின்.

இதையடுத்து பேசிய விஷால், ‘துப்பறிவாளன்’ தமக்கு நிச்சயமாக நல்ல பெயர் பெற்றுத் தரும் என்றார். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக இந்தப் படம் மிகப் பெரிய ஊக்கத்தை தந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மிஷ்கினுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தார். தன்னையும் மிஷ்கினையும் பலர் ‘சைக்கோ’ என்று வெளிப்படையாக விமர்சிப்பதாகவும் தெரிவித்த விஷால், இரண்டு சைக்கோக்கள் இணைந்து எப்படி படம் எடுக்கப் போகிறார்கள் என்று சிலர் கேலி பேசியதாகவும் குறிப்பிட்டார்.

‘துப்பறிவாளன்’ படத்தின் ஒரு காட்சியில் விஷால், பிரசன்னா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon