ராஜ்கிரண்: 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கவே இல்லை

நடிகர்கள் யாரும் சம்பளத்தை உயர்த்துவதில்லை என்றும் தயா ரிப்பாளர்கள்தான் தேவையின்றி உயர்த்துகிறார்கள் என்றும் சொல்கிறார் ராஜ்கிரண். ‘பவர் பாண்டி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருகிறாராம். அந்தப் படம் வெளியான பின், தனக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக பரவிய தகவல் அறவே உண்மையற்றது என்கிறார். “நான் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று எப்போதுமே கேட்டது இல்லை. ஆனால் ‘பவர் பாண்டி’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியான அன்றே உங்கள் சம்பளம் ரூ. 5 கோடியா என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். “ஆக, நடிகர்கள் சம்பளத்தை ஏற்றுவதில்லை.

ஒரு நடிகரின் வெற்றிப் படத்துக்குப் பின்னர் அவரது அடுத்த படம் தங்களு டையதாக இருக்கவேண்டும் என முடிவு செய்து தயாரிப்பாளர்கள் தான் கதாநாயகர்களை மொய்க்கி றார்கள். கதைதான் எப்போதுமே முக்கியம். அதை என்று உணர் கிறார்களோ, அப்போதுதான் தமிழ்த் திரையுலகம் வெற்றிகரமாக இயங்கும். “நான் நடித்த ‘மஞ்சப்பை’ படத்தின் கதையை இயக்குநர் சற்குணம் என்னிடம் சொன்ன போது, படத்தின் செலவு குறித்து எந்தவித யோசனையும் எங்க ளுக்கு இல்லை. இயக்குநர் லிங்குசாமி படம் தயாரிக்க முன்வந்தார். சம்பளம், தயாரிப்புச் செலவு, விளம்பரம் என மொத்தம் ஏழரைக் கோடியில் ‘மஞ்சப்பை’ தயாரானது. “தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூலானது. மற்ற வருவாய் மூலம் மொத்தம் 30 கோடி கிடைத்ததாகத் தகவல். “உடனே என் சம்பளத்தை உயர்த்த முடியுமா? ஆனால் தயா ரிப்பாளர்கள் உயர்த்த முன் வரு கிறார்கள். அதுதான் தவறு,” என்கிறார் ராஜ்கிரண்.

‘பவர் பாண்டி’ படத்தின் ஒரு காட்சியில் ராஜ்கிரண்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon