சுடச் சுடச் செய்திகள்

கலவரத்தை தூண்ட பணம் பெற்ற ஏழு தலைவர்கள் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கலவரத்தைத் தூண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றது தொடர்பாக 7 பிரிவினைவாத தலைவர்கள் நேற்று கைது செய்யப் பட்டனர். ஹுரியத் தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் ஷா, இதர பிரிவினைவாத தலைவர்கள் பரூக் அகமது தார், நயீம் கான், ஆயாஷ் அக்பர், பீர் சைபுல்லா, மெஹ்ராஜ் கல்வால், ஷாகித் அல்- இஸ்லாம் ஆகிய ஏழு பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஸ்ரீநகரில் கைது செய் யப்பட்ட அவர்கள் விசாரணைக் காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தூண்ட பாகிஸ் தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் பெருந்தொகை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கைது செய்யப்பட்ட ஏழு பிரிவினைவாத தலைவர்களும் ஏற்றப்பட்ட வாகனத்துக்கு பாதுகாப்பளிக்கும் காவலர்கள். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon