‘தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை’

புதுடெல்லி: தானியங்கி வாகனங்கள் இந்திய சாலைகளில் இயங்க அனுமதிக்கப்போவதில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஆண்டுதோறும் 22,000 ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகத் தெரிவித்தார். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கும் வகையிலான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சூழலில் தானியங்கி வாகனங்களை இந்தியச் சாலைகளில் எப்படி அனுமதிக்கமுடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Loading...
Load next