சுடச் சுடச் செய்திகள்

ஹாங்காங்கில் கோடைக்கால காய்ச்சல்: 200 பேர் பலி

ஹாங்காங்: ஹாங்காங்கில் வழக் கத்திற்கு மாறாக கோடைக்கால காய்ச்சலால் பலர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அத்தகைய நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் மருத்துவமனைகள் சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக் கப்படுவதற்கு சில நோயாளிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சேர்ப்பதற்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் பல மருத்துவ மனைகள் சிரமப்படுகின்றன. கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை அக்காய்ச்சலுக்கு 200க்கும் அதிகமானோர் பலியான தாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த மாதத்தில் முதல் இரு வாரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 நோயாளி களை அரசாங்க பொது மருத்துவ மனை வார்டுகளில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக ஹாங்காங்கின் மருத்துவமனை ஆணைய இயக்குநர் சியுங் வை லுன் கூறினார்.

வழக்கமாக இதுபோன்ற நிலவரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு இது பத்து நாட்களுக்கு மேலாக நீடிப்பதாக அவர் சொன்னார். மருத்துவமனை வார்டுகளில் சேர்க்கப்பட்ட இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 100 விழுக் காட்டையும் மிஞ்சியிருப்பதால் அரசாங்க மருத்துவமனைகளில் வேளைப்பளு மிகவும் அதிகரித் துள்ளது என்று இயக்குநர் திரு சியுங் கூறியதாக சவுத் சைனா மார்னிஸ் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,562 பேர் அரசாங்க மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவை நாடி வந்த தாகவும் அவர்களில் 831 பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon