சுடச் சுடச் செய்திகள்

காட்டுத் தீயால் அச்சேயில் புகை மூட்டம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் பல இடங் களில் காட்டுத் தீ பரவி வருவ தால் அம்மாநில மேற்குப் பகுதி முழுவதும் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் வறட்சி அதிகரிக்கும் என்பதால் காட்டுத் தீயின் மிரட்டல் அதிகமாக இருக் கக்கூடும் என்று இந்தோனீசிய பேரிடர் நிவாரண அமைப்பு எச்சரித்துள்ளது. அச்சே மாநிலத்தில் உள்ள காடுகளில் 54 ஹெக்டர் நிலப்பரப்பில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் சில குடியிருப்பாளர் களுக்கு மூச்சுத் திணறல் ஏற் பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாக அமைப்பு தெரிவித்தது. வரும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கோடை வறட்சி உச்ச கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சே மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்டுத் தீ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்க தீயணைப் பாளர்களும் ராணுவ வீரர்களும் போராடி வருகின்றனர். இதற்கிடையே இந்தோனீசி யாவில் 170 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதை துணைக் கோளப் படங்கள் காட்டுகின்றன. காட்டுத் தீ பரவுவதால் இந்தோனீசியா ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறது. காட்டுத் தீயால் ஏற்படும் புகை மூட்டத்தால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளும் பாதிக்கப் படுகின்றன. வறட்சி காரண மாகவும் சிலர் சட்டவிரோதமாக நிலத்தை சுத்தப்படுத்துவதாலும் இந்தோனீசியாவில் ஆண்டு தோறும் காட்டுத் தீ பரவி வரு கிறது. தீயைக் கட்டுப்படுத்த இந்தோனீசியா பல நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

மேற்கு அச்சே மாநிலத்தில் காட்டுத் தீயை அணைப்பதில் இந்தோனீசிய வீரர் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon