மும்பை: கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் மரணம்

இந்தியாவின் மும்பை புறநகரில் நேற்று நாற்பதாண்டு பழமையான நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாலை வரை 12 பேர் உயிரிழந்தனர். பெரிய காங் கிரீட் பலகைக்குள் பலரும் மாட்டி யிருப்பதாகவும் அதனை அகற்றி குடியிருப்பாளர்களை மீட்கும் பணி நடப்பதாகவும் மும்பை தீயணைப்பு நிலையத்தின் தலைமை அதிகாரி பி.எஸ். ரஹாங்டேல் தெரிவித்தார். காட்கோபார் என்னும் இடத்தில் தாமோதர் பார்க் பகுதியிலிருந்த அந்தக் கட்டடத்தின் தரைத்தளத் தில் தாதிமை இல்லம் ஒன்று இயங்கி வந்தது. காலை 10.45 மணியளவில் கட்டடம் இடிந்த போது அங்கு அதிகமான நோயா ளிகள் இல்லை என்று தெரிவிக் கப்பட்டது. இதர மூன்று தளங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங் கள் வசித்து வந்தன. எனவே மாண்டோர் தவிர 20 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். சம்பவம் நிகழ்ந்ததுமே ஏராள மான தீயணைப்பு, மீட்பு வாகனங் களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் அந்த இடத்துக்கு விரைந்தன. மீட்கப்பட்டவர்கள் ராஜவாடி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களில் எட்டுப் பேர் உயி ரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பழமையான கட்டடம் என்பதால் தரைத்தளத்தைப் புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்று வந்ததாக வும் அதனைத் தொடர்ந்தே கட்ட டம் இடிந்து விழுந்ததாகவும் மும்பை நகர்மன்ற அதிகாரிகள் கூறினர். கண்ணிமைக்கும் நேரத் தில் நான்கு மாடிகளும் முழுமை யாக இடிந்து தரைமட்டமாகிவிட்ட தாக அவர்கள் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon