சுடச் சுடச் செய்திகள்

மலேசியப் பிரதமர் நஜிப்: எதிர்க்கட்சியினரை நம்பாதீர்கள்

எதிர்க்கட்சியினரை நம்பாதீர்கள் என்று மலேசிய முதலீட்டாளர்களை அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்த குடும்ப ஆட்சி மற்றும் லஞ்சப் புகார் களைத் தாம் வன்மையாகக் கண் டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்துலக வர்த்தகக் கூட் டம் ஒன்றில் நேற்றுக் காலை உரை நிகழ்த்திய அவர், தமக்கு வேண்டியவர்களுக்காகக் கொள் கைகளை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவரின் தலைமை யில் எதிர்த்தரப்பு இயங்குவதாக மகாதீரை நஜிப் மறைமுகமாகச் சாடினார். அம்னோவின் தலைவராகவும் இருக்கும் திரு நஜிப், தமது அர சியல் எதிரிகளைக் குறைகூறு வதற்கு அனைத்துலக வர்த்தக நிகழ்வுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிது என்று ‘மலாய் மெயில்’ குறிப்பிட்டுள்ளது. “இந்த அரசாங்கம் எப்போதும் நேர்மையுடனேயே நடந்துகொள் ளும்.

மக்களுக்குத் தேவையா னதைச் செய்யும்,” என்று ‘இன் வெஸ்ட் மலேசியா 2017’ என்னும் முதலீட்டாளர்களுக்கான நிகழ் வில் திரு நஜிப் குறிப்பிட்டார். ‘பக்கத்தான் ஹரப்பான்’ கூட் டணியின் தலைவராக அண்மை யில் டாக்டர் மகாதீர் நியமிக்கப் பட்டது குறித்து கருத்து தெரி வித்த திரு நஜிப், “எதிர்த்தரப்பின் தலைமைத்துவ கட்டமைப்பு என் பது கேலிக்கூத்தான ஒன்று. அர சியலில் இருந்து ஓய்வுபெற்ற, வயதானவர்கள் ஒன்றிணைந்தி ருப்பது ஓய்வுக்காலத்தில் மீண் டும் வேலைக்குத் திரும்புவதைப் போன்றது,” என்றார். திரு நஜிப்பின் கருத்துக்கு எதிரணித் தலைவர் டாக்டர் வான் அஸிசா இஸ்மாயில் உடனடியாக பதில் தெரிவித்தார். ‘பக்கத்தான் ஹரப்பான்’ கூட்டணியை நஜிப் மோசமாக விமர்சித்திருப்பது அவரது அச்சத்தின் வெளிப்பாடு என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon