இந்தியாவின் துணை அதிபர் வேட்பாளர் மீது ஊழல் புகார்

இந்தியாவின் 14வது அதிபராக ராம் நாத் கோவிந்த் பதவியேற் றிருக்கும் வேளையில் துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு, 68, துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட் டுள்ளார். அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ள கோபால் கிருஷ்ண காந்தியை காங்கிரஸ் கூட்டணி ஆதரிக்கிறது. இந்நிலையில், வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் கட்சி கடுமையான மோசடி புகார்களைத் தெரிவித்துள்ளது. வெங்கையா நாயுடுவின் மகனும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் இணைந்து நடத் தும் வாகன நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசின் 271 கோடி ரூபாய் பணிக்கான ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள தாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரி வித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஏலக் குத்தகை அறிவிக்கப்பட வேண் டும் என்று விதி இருந்தும் அவ்வாறு எவ்வித ஏலமும் விடா மல் மோசடி நடந்துள்ளது என்று நேற்று முன்தினம் புதுடெல்லியில் தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் வரை ஊரக வளர்ச்சி அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு தமது குடும்பத்தோடு தொடர்புடைய அறக்கட்டளை, வர்த்தகம் என்ற பெயர்களில் தெலுங்கானா, மத்திய பிரதேச அரசாங்கங்களிடம் சலு கைகளைப் பெற்றதாகவும் ஜெய் ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மை பற்றியும் நேர்மை பற்றியும் கவிதை நடையில் பேசும் வெங்கையா நாயுடு தமது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில் தெரிவிக்க வேண்டும். அவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த பாஜகவும் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெய்ராமின் புகார்கள் தரம் தாழ்ந்தவை என்று திரு வெங்கையா நாயுடு பதிலளித் துள்ளார். இவ்வாறு காங்கிரஸ் குற்றம் சாட்டுவது புதிதல்ல என்றும் இது தொடர்பான புகார்கள் நீதிமன்றத் தால் ஏற்கெனவே தள்ளுபடி செய் யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon