சிங்கப்பூரில் அனைத்துலக நடுவர்மன்ற அலுவலகம்

ஆசிய அளவில் நாடுகள், வர்த்த கங்களுக்கு இடையேயான பூசல் களுக்குத் தீர்வு காண்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய அலுவலகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது. அனைத் துலக நடுவர் மன்றம் தொடர்பான அண்மைய மேம்பாடுகளில் இது வும் ஒன்று. மேக்ஸ்வெல் சேம்பரில் இந்த அலுவலகம் அடுத்த ஆறு மாதங் களுக்குள் அமைக்கப்படும். ஆசி யாவில் நிறுவப்படும் முதல் நிரந்தர நடுவர் மன்றமாக இது அமைகிறது. இந்த வட்டாரத்தில் விசா ரணைக்கு உட்படுத்தப்படும் வழக் குகளை நிரந்தர நடுவர் மன்றம் நிர்வகிக்கும் என நிரந்தர நடுவர் மன்றமும் சட்ட அமைச்சும் சேர்ந்து நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரு வதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. 2015ஆம் ஆண்டில் அத்தகைய நான்கு வழக்குகள் இருந்தன.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் அத்தகைய ஏழு வழக்குகள் விசாரிக்கப்படும். சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, நிரந்தர நடுவர் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹூகோ எச்.சிப்லெஸ் ஆகியோர் புதிய அலுவலகம் அமைக்கப் படுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையொப்பமிட்டனர். அப்போது தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் ஆகியோர் உடனிருந்தனர். தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், பொதுத் தூதர் டாமி கோ ஆகியோர் நிரந்தர நடுவர் மன்ற தற்சார்பு நடுவர் குழுவில் சிங்கப்பூரின் நியமனப் பிரதிநிதி களாக இருப்பர் என குமாரி இந்திராணி ராஜா கூறினார்.