‘சிங்ஹெல்த்’ தாதியருக்கு புதிய வெண்ணிறச் சீருடை

‘சிங்ஹெல்த்’ சுகாதாரக் கழகம் தனது தாதியருக்கு புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த மாற்றத்தை அது செய்துள்ளது. சிங்கப்பூர் பொது மருத்துவ மனை, கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை நிலையங்கள் போன்ற 11 சுகாதாரச் சேவைக் கழகங்களில் இந்த மாற்றம் அறிமுகமாகிறது. ‘சிங்ஹெல்த்’ நிறுவனம் இவ்வாண்டு தாதியர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தப் புதிய சீருடைகளை நேற்று அறிமுகம் செய்தது. சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தாதியராகப் பணிபுரியும் கழ கம், தாதியரின் பதவிநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப 2007ஆம் ஆண்டு முதல் ‘சிங்ஹெல்த்’ தாதியர் வெவ்வேறு நிறங்களில் சீருடைகள் அணிந்து வந்தனர். மாறுபட்ட நிறங்கள் அந்தந்த சுகாதாரக் கழகத்தின் அடையாள மாக இருந்தது. மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை நிலையங்கள் என பல்வேறு பராமரிப்பு அமைப்புகளில் பணிபுரியும் ‘சிங்ஹெல்த்’தின் 12,000 தாதியருக்கு அடுத்த ஆண்டு இந்தப் புதிய சீருடைகள் வழங்கப்படும். நேற்றைய நிகழ்ச்சியில் 47 தாதியருக்கு விருதுகளை வழங் கிச் சிறப்பித்தது ‘சிங்ஹெல்த்’.

‘சிங்ஹெல்த்’ சுகாதாரக் கழகத் தாதியருக்கான புதிய சீருடைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும். சீருடையில் இருக்கும் பட்டைகளில் உள்ள வெவ்வேறு நிறங்களைக்கொண்டு தாதியரின் பதவிநிலைகளை அறிந்துகொள்ளலாம். படம்: சிங்ஹெல்த்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். படங்கள்: திருவாட்டி வாங்

19 Nov 2019

சிறுவன் குடித்த 'ஸ்மூதி'யில் கண்ணாடித் துகள்கள்; மன்னிப்புக் கோரிய உணவகம்

கணவருடன் சேர்ந்து $191,000 தொகையை மோசடி செய்த லூயிஸ் லாய் பெய் சியனுக்கு சிறைத் தண்டனை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு 17 மாதச் சிறை