சிராங்கூன் நார்த்தில் 3 ஸிக்கா கிருமி தொற்று சம்பவங்கள்

உள்ளூரில் பரவிய மூன்று ஸிக்கா கிருமித் தொற்றுச் சம்பவங்கள் சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த மூன்று சம்பவங்களும் அந்தப் பகுதியில் வசிப்போர் தொடர்பானவை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. புதிய தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நோய் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. அடித்தளத் தொண்டூழியர் களுடன் இணைந்து சிராங்கூன் நார்த் அவென்யூ 1 பகுதியைச் சுற்றிலும் நோய் பரவல் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றது வாரியம். ஸிக்கா பற்றிய பொது விழிப்புணர்வை ஊட்ட கையேடு களும் பூச்சி விரட்டு மருந்துகளும் விநியோகிக்கப்பட இருப் பதாகவும் அது கூறியுள்ளது. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சி விரட்டு மருந்துகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.