‘உறுதி கொள்’

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதல் என்பது தவறானது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக உருவாகி வருகிறது ‘உறுதிகொள்’. ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர்தான் இப்படத்தின் நாயகன். மோகனா நாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் ஆர்.அய்யனார். “பள்ளியில் காதலிப்பதே தவறு என்கிறபோது, அச்சமயம் காதலன் அழைக்கும் இடத்துக்கெல்லாம் காதலி சென்றால் என்ன விளைவு ஏற்படும் என்பதை காதல், குடும்ப உணர்வு கலந்து இந்தப் படத்தில் நல்ல அறிவுரையாகச் சொல்கிறோம்,” என்கிறார் இயக்குநர் அய்யனார்.

Loading...
Load next