நடிகைகள் சங்கத்தின் கடும் எதிர்ப்பு

நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு உள்ளாவதில்லை என கேரள நடிகர்கள் சங்க பொதுக்குழு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து, கேரள நடிகைகள் சங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ‘கலெக்டிவ் வுமன் இன் சினிமா’ என்ற பெயரில் இயங்கி வரும் கேரள பெண் நடிகைகள் சங்கத்தின் தலைவி வேறு யாருமல்ல, நடிகை பாவனாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர். இந்தச் சங்கம்தான் கேரள நடிகர்கள் சங்க பொதுக்குழுவின் கருத்துக்களுக்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் புதுமுக நடிகைகள் சுதந்திரமாக இருப்பதில்லை. அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். “ஆதிக்க மனம் கொண்ட அதிகார அத்துமீறல்கள் கேரளாவில்தான் அதிகம் உள்ளது,” என்று அச்சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாக மஞ்சு வாரியருக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனராம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்