சுடச் சுடச் செய்திகள்

ஆதி: கிடைத்துள்ள வெற்றி பிரமிப்பு தருகிறது

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உற்சாகத்தில் இருக்கிறார் அதன் நாயகன் ஹிப் ஹாப் ஆதி. இப்படத்தை தயாரித்தது சுந்தர் சி. தான் என்றாலும், புதுமுகங்களைக் கொண்டு, கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என அனைத்திலுமே பங்குபெற்றார் ஆதி. அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப் பின் போது, படத்தின் வெற்றி குறித்து தம் மகிழ்ச் சியைப் பகிர்ந்துகொண்டார் சுந்தர்.சி. “இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம் பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்த அளவு பிரம்மாண்ட வெற்றி பெறும் என்பது எனக்கும் கூட ஆச்சரியமான விஷயம் தான். “சொல்லப் போனால் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளே, இப்படம் வெற்றி பெறும் என நான் கூறினேன். அதை யாரும் நம்பவில்லை. அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமே நூறு விழுக்காடு இருந்தது.

“இளையர்கள் மனதில் மட்டுமே இடம்பிடிக்கும் என்று சிலர் கூறினர். ஆனால் எல்லா தரப்பு ரசிகர் களையும் இப்படம் கவர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 250 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டோம். மூன்றே நாட்களில் இருமடங்காக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதுதான் படத்தின் உண்மையான வெற்றி. “நான் ஆதி மேல் முழு நம்பிக்கை வைத்தி ருந்தேன். அதற்கு ஓர் உதாரணத்தைக் கூற வேண்டும். படப்பிடிப்பு தொடர்பாக நானும் ஆதியும் ஒரு கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம். வெளியே வந்து பார்த்தால், ஒட்டுமொத்த கல்லூரி மாணவர் களும் ஆதியைப் பார்க்க ஆவலுடன் காத்திருந் தார்கள். இளையர்களுக்கு ஆதி மேல் அப்படி ஓர் ஈர்ப்பு. அப்போதே இப்படம் வெற்றி பெறும் என்று முடிவு செய்துவிட்டேன்,” என்றார் சுந்தர்.சி. தமது 22 ஆண்டு திரை வாழ்க்கையில், ஒரு படம் வெளியான அன்றே விநியோகஸ்தர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடிய முதல் படம் என்றால் அது ‘மீசைய முறுக்கு’ தான் என்று குறிப்பிட்டவர், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் திரையரங்கில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது என்றும் அண்மையில் வெளியான ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய இரு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.

தற்போது மக்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கி உள்ளது திரைத்துறைக்கு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது என்றார் சுந்தர்.சி. அடுத்து பேசினார் ஆதி. ‘மீசைய முறுக்கு’ தனது முதல் முயற்சி என்று குறிப்பிட்டவர், இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், முதல் முறையாக நாயகனாக நடித்து, படத்தை இயக்கி இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள வெற்றி தமக்கு பிரமிப்பாக உள்ளது என்றும் புதிய உற்சாகத்தைத் தருகிறது என்றும் ஆதி கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon