சுடச் சுடச் செய்திகள்

தினகரனுக்கு முதல்வர் தரப்பு கடும் எச்சரிக்கை

சென்னை: அதிமுக விவகாரங் களில் தலையிடாமல் டிடிவி.தின கரன் ஒதுங்கி நிற்கவேண்டும் என அவர் சார்பாக தம்மை அணு கிய தூதரிடம் முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இல்லையெனில் தினகரன், சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை பாயும் என அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ் சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரன், பிணை பெற்று வெளியே வந்ததும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டார். எனினும் சசிகலாவைச் சிறை யில் சந்தித்துப் பேசியபிறகு, அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும் அதன் பின்னர் கட்சி நடவடிக்கை களில் ஈடுபட இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் முற்றிலு மாக விலக்கிவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி தரப்பு வெளிப் படையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தினகரன் விதித்த கெடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள் ளது. இதையடுத்து அவர் சார்பாக தூதர் ஒருவர் அண்மையில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி யதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. அச்சமயம் கட்சி நடவடிக்கை களை மேற்கொள்ள தினகரனை அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த முதல்வர் எடப்பாடி, அரசி யலை விட்டே தினகரன் ஒதுங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“எம்எல்ஏக்களை வளைப்பது, ஆட்சிக்கு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் தினகரன் தரப்பு ஈடுபடுவதை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. சசிகலா குடும்பத்தினர் மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பது தெரிந்தும் இதுவரை நான் நடவடிக்கை எடுக்கவில்லை. தினகரன் அத்துமீறினால் நடவ டிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என முதல்வர் எடப் பாடி, தினகரனின் தூதவரிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்,” எனத் தமிழக ஊடகம் குறிப்பிட் டுள்ளது. இதற்கிடையே ஓபிஎஸ் அணியி னர் தனியாகச் செயல்படுவதைக் கைவிட்டு, பாஜகவில் இணைய வேண்டும் என டெல்லி தரப்பு வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத் துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இணைவது தொடர்பாக அவர் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் பழனிசாமி. படம்: இணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon