சுடச் சுடச் செய்திகள்

இந்திய அணி அபார ஆட்டம்

காலே: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ‌ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 190 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து புஜாராவும் சதமெடுத்ததால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய=-இலங்கை அணி களுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் காலே நகரில் நேற்று தொடங்கியுள்ளது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற வில்லை. ஹார்திக் பாண்டியா அறிமுகமாகியுள்ளார். ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வி னுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

இதேபோல இலங்கை அணியில் குணதிலகா அறிமுகமாகியுள்ளார். முதல் நாள் தேநீர் இடை வேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் குவித்தது. புஜாரா 75 ஓட்டங்களுடனும் கோலி 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தார்கள். பிறகு கோலி ஓட்டங்களில் பிரதீப்பின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. டிஆர்எஸ் முறையில் வெளியேறி னார் கோஹ்லி. இதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா = ரகானே ஆகிய இருவரும் நிதானமான ஆட் டத்தை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இல்லாமல் நேற்று சற்று வேகமாக ஓட்டங்கள் குவித்த புஜாராவும் தவான் அவுட் ஆனபிறகு பொறுமையாக விளையாடினார். பிறகு 173 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இது புஜாராவின் 12-வது சதமாகும். இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ஓட்டங்கள் எடுத்திருந்தது. புஜாரா 144, ரகானே 39 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon