பயர்ன் குழுவின் ஆட்டத்தைக் கண்டு வியந்த சிங்கபபூரர்கள்

செல்சி, மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் எனும் இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களை ஆதரிக் கும் ரசிகர்கள் மத்தியில் 36 வயது சிவராம் தனித்து நிற்கிறார். இவர் ஜெர்மானிய புண்டஸ்லீகா ஜாம்பவான்களான பயர்ன் மியூனிக் குழுவை கிட்டத்தட்ட 20 ஆண்டு களாக ஆதரித்து வருகிறார். வெகு காலமாக மியூனிக் நக ருக்குச் சென்று இக்குழு விளை யாடுவதைப் பார்வையிட வேண்டும் என்ற கனவு கொண்ட சிவாவுக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ண காற்பந்துப் போட்டிக்காக இங்கிலாந்தின் செல்சி அணி, இத்தாலிய இன்டர் அணி, ஜெர்மானிய பயர்ன் மியூனிக் அணி ஆகியவை சிங்கப் பூருக்கு வந்துள்ளன. இம்மூன்று குழுக்க ளிடையே ஜூலை 29 வரை ஆட்டங்கள் சிங்கப்பூர் விளை யாட்டு அரங்கில் நடக்கும். பயர்ன் மியூனிக் குழுவுக்கும் செல்சி குழுவுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தை சிவா பார்வையிட்டார்.

இவ்விறுவிறுப்பான ஆட்டம் 3-2 என்ற கோல் கணக்கில் பயர்ன் குழுவுக்குச் சாதகமாக முடிந்தது. இந்த ஆட்டம் நடப்ப தற்கு முன்னதாக சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரசிகர் கூடாரத் தில் சிவா பயர்ன் மியூனிக் காற் பந்து சகாப்தமான மிரோசலாவ் கிலோ சரைச் சந்தித்து அவருடன் புகைப் படம் எடுத்து ‘ஆட்டோ கிராஃப்’பும் பெற்றுக்கொண்டார். தன் விருப்பான குழுவை நேரில் சந்தித்தது கனவு நனவா னதுபோல இருந்தது என்று குறிப் பிட்ட அரசாங்க ஊழியர் சிவா, பயர்ன் குழுவில் இதுவரையில் சேர்ந்துள்ள புதிய வரவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர்களில் ஒருவரான நட்சத்திர மத்திய திடல் ஆட்டக் காரர் ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் தன் முதல் பயர்ன் ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். ஆனால் கோல் அடிக்கும் சிறந்த வாய்ப்புகளை அவர் நழுவவிட்டனர். இனி தொடங்கவிருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டிகளில் இடம்பெறும் குழுக்கள் பயர்ன் குழுவைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று எச்சரித்தார் சிவா.

சிறப்பு ரசிகர் கூடாரத்தில் பயர்ன் மியூனிக் காற்பந்து சகாப்தமான மிரோஸ்லாவ் கிலோசைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ‘ஆட்டோகிராஃப்’பும் பெற்றுக்கொண்டார் அக்குழு ரசிகர் சிவராம். படம்: திமத்தி டேவிட்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon