ஆப்கான் தாக்குதலில் 26 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாநிலத்தில் உள்ள ஒரு ராணுவத் தளத்தைக் குறிவைத்து தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் ஆப்கான் வீரர்கள் 26 பேர் உயிரிழந்ததாகவும் 13 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் கூறினர். போராளிகளின் தாக்குதல் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது ஆப்கான் விமானப் படை விமானங்கள் போராளிகள் மீது குண்டுகளை வீசித் தாக்கியதாகவும் அதே வேளையில் தரைப்படை யினரும் குவிக்கப்பட்டிருந்த தாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆப்கான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தலிபான் போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.