பிரான்சில் காட்டுத் தீ பாரிஸ்: பிரான்சின்

தென்பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அப்பகுதி யிலிருந்து குறைந்தது 10,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். காட்டுத் தீயை அணைக்க ஐரோப்பாவின் உதவியை பிரான்ஸ் நாடியுள்ளது. காட்டுத் தீயை அணைப்பதில் சுமார் 4,000 தீயணைப் பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் குண்டுகளைப் பயன்படுத்தி தீயணைப்பதில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புப் பணியின்போது 7 தீயணைப்பாளர்கள் காயம் அடைந்ததாகாவும் 15 போலிஸ் அதிகாரிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Loading...
Load next