மகாதீர்: 1எம்டிபி பற்றிய ரகசியத் தகவல் தெரியும்

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி பற்றி பேங்க் நெகரா மலேசியா (பிஎன்எம்), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தலைமைக் கணக்காய்வாளர் ஆகிய முத்தரப்புகளின் அறிக்கைகளில் உள்ள ரகசியத் தகவல்கள் தமக்கு நன்றாகவே தெரியும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மூலம் அறிக்கையின் ரகசியத் தகவலை தான் அறிந்து கொண்டதாக மகாதீர் கூறினார். 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி முகம்மது அபாண்டி அலி அறிவித்தது பொய் என்பது தமக்கு அப்போதே தெரியும் என்று திரு மகாதீர் கூறியுள்ளார்.

Loading...
Load next