சிங்கப்பூரில் ‘அமேசான்’ சேவைகள்

உலகப் புகழ்பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தனது சேவை நிலையத்தை சிங்கப்பூரில் தொடங்கி தென்கிழக் காசியாவில் கால்பதிக்க உள்ளது. ‘டெக்கிரன்ச்’ என்னும் தொழில் நுட்ப இணையத்தளமும் மற்ற முன்னணி இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில், அமே ஸே„ன் இந்த வாரத்திற்குள் சிங் கப்பூரில் சேவை நிலையத்தைத் திறக்கவிருக்கிறது என்று கூறி யுள்ளது. சீனாவின் மாபெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா கடந்த ஆண்டு தென்கிழக்காசியா வில் தனது வர்த்தகத்தை விரிவு படுத்தி வருகிறது. அது மலேசி யாவின் மின்னியல் துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.

சீனாவை அடுத்து மலேசியா வில் மின்னியல் துறையில் ‘டிஜிட்டல் வாலட்’, ‘அலிபாபா கிளவுட் சர்வீஸ்’ போன்ற சேவை களை பெரிய அளவில் வழங்கி வருகிறது. இந்நிலையில் அதேபோன்ற இணைய வர்த்தக சேவைகளை வழங்கி வரும் அமேஸே„ன் நிறு வனம் இப்போது சிங்கப் பூருக்குள் நுழையவுள்ள தாகக் கூறப்படுகி றது. இந்தச் செய்தி பற்றி அமே சான் நிறுவ னம் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை. இந்நிறுவனத் தின் மின் வர்த்தக சேவை தொடங் கப்பட்டதும் அந்த இணையத் தளம் வழியாக வாங்கும் மின்சார, மின்னியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட் களை சுணக்கமின்றி இரண்டு மணி நேரத்திற்குள் வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பி வைக்க இயலும்.

Loading...
Load next