சுடச் சுடச் செய்திகள்

ரஷ்யா மீது தடைகள் விதிக்க அமெரிக்கா நடவடிக்கை

வா‌ஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிரான ஒரு சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்ப தற்கு ஆதரவாக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித் துள்ளது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றஞ் சாட்டப்படும் நிலையில் அதற்குப் பதிலடி நடவடிக்கையாக மூத்த அதிகாரிகள் குறி வைக்கப் படுவார்கள். ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான அதிபர் டிரம்ப்பின் நம்பிக்கையை இந்த மசோதா சிக்கலாக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த மசோதாவில் அதிபர் கையெழுத்திடுவதற்கு முன்பு செனட் சபையின் ஒப்புதலை பெற வேண்டும். இந்நிலையில் இந்த மசோதாவை ஆய்வு செய்து வருவதாகவும் அதிபர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்துவாரா என்பது குறித்து தெளிவற்ற நிலை இருப்பதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

வடகொரியா, ஈரான் மற்றும் ரஷ்யா மீது கடும் தடைகளை விதிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்து வரும் நிலையில், நாடாளுமன்ற மசோதா குறித்து வெள்ளை மாளிகை ஆராய்ந்து வருவதாகவும் அதிபரின் அலுவலகம் இறுதிச் சட்ட வரைவு ஒன்றுக்காக காத் திருக்கிறது என்றும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இதற்கிடையே ஒபாமா சுகாதார கவனிப்பு திட்டத்தை ரத்து செய்வது குறித்து செனட் சபையில் விவாதம் நடந்தது. அத்திட்டத்தை ரத்து செய்ய போதிய வாக்குகள் கிடைக் காததால் புதிய திட்ட மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படவுள்ள தாக குடியரசு கட்சி தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon