சுடச் சுடச் செய்திகள்

இளையர்களை ஈர்த்த கலாம்: மோடி புகழாரம்

மறைந்த இந்திய அதிபரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவாகக் கட்டப்பட்ட மணி மண்டபத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். திரு கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு அருகே, அவரது நல்லுடல் அடக்கம் செய்யப் பட்டுள்ள பேய்க்கரும்பு எனும் ஊரில் 15 கோடி ரூபாய் செலவில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது 2வது ஆண்டு நினைவு நாளான நேற்று அந்த மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த மோடி, பின் அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் பேய்க்கரும்பு சென்றார். மணிமண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த மோடி, பின் திரு கலாமின் சிலையையும் மணி மண்டபத்தையும் திறந்து வைத் தார். திரு கலாமின் நினை விடத்தில் மலரஞ்சலி செலுத்திய மோடி, அவரது குடும்பத்தினரை யும் சந்தித்து உரையாடினார். அங்குள்ள அருங்காட்சியகத் தில் திரு கலாமின் உடை, விருதுகள், பொன்மொழிகள் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திரு கலாம் வீணை இசைப்பது போன்ற ஒரு சிலையும் அந்த மணிமண்டபத் தில் நிறுவப்பட்டுள்ளது. ‘சந்தேஷ் வாகினி விஷன் 2020’ என்ற அப்துல் கலாமின் சாதனைப் பிரசார வாகனத்தை யும் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின் அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த விழா மேடைக்குச் சென்று பொதுமக்கள் முன் உரையாற்றிய மோடி, “இந்திய வரலாற்றில் ராமேசுவரத்திற்கு முக்கிய இடமுண்டு. இந்தியா வின் சிறந்த புதல்வர்களில் ஒரு வரான டாக்டர் அப்துல் கலாமை அளித்த புண்ணிய பூமி இது. இங்கு வந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார். “எளிமை, அமைதி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பெயர்போன திரு கலாம் இந்திய இளையர்களை மிகவும் கவர்ந்தார். அவரால் ஈர்க் கப்பட்ட இன்றைய இளையர்கள் வளர்ச்சியின் உச்சத்தை அடை யவும் வேலைவாய்ப்புகளை உரு வாக்குபவர்களாகத் திகழவும் விரும்புகின்றனர்,” என்றும் திரு மோடி பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon