சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்காவுக்கு தங்கக் கிண்ணம்

‘கோன்காகாஃப்’ எனப்படும் வடக்கு, மத்திய அமெரிக்க, கரீபிய காற்பந்துச் சங்கக் கூட்டமைப்பின் தங்கக் கிண்ண இறுதியாட்டத்தில் அமெரிக்க அணி 2=1 என்ற கணக்கில் ஜமைக்காவை வென்று ஆறாவது முறையாக அக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. கலிஃபோர்னியாவின் சான்ட கிளாரா நகரில் நடந்த அந்த ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஜோர்டன் மோரிஸ் அடித்த கோல் அமெரிக்காவுக்குக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தது. முற்பாதியின் கடைசி நிமிடத்தில் ஜோஸி ஆல்ட்டிடோர் போட்ட கோலால் முன்னிலைக்குச் சென்றது அமெரிக்கா. ஆயினும் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களிலேயே அந்த முன்னிலையை ஈடுகட்டியது ஜமைக்கா. அந்த கோலுக்குச் சொந்தக்காரர் ஜி வான் வாட்சன். 2015ஆம் ஆண்டிலும் இதேபோல இறுதியாட்டத்தில் மண்ணைக் கவ்வியது ஜமைக்கா. அப்போது அவ்வணியை வீழ்த்திய மெக்சிகோ, ஆக அதிகமாக ஏழு முறை தங்கக் கிண்ணத்தை வென்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon