சுடச் சுடச் செய்திகள்

ரியால் மட்ரிட்டை நசுக்கிய மேன்சிட்டி

லாஸ் ஏஞ்சலிஸ்: தாக்குதல் வரிசையைப் பலப்படுத்துவதற் காக அதிகம் செலவிட்டிருக்கும் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு, தாக்குதலிலும் தான் வலு வான அணிதான் என்பதைப் பறைசாற்றியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த அனைத்துலக வெற்றியா ளர்கள் கிண்ண ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி குழு 4-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவைத் தோற்க டித்தது. லாஸ் ஏஞ்சலிஸ் விளையாட்டு அரங்கில் 93,0000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியே, பருவத்திற்கு முந்திய பயிற்சிப் பயணத்தில் சிட்டிக்குக் கிடைத்த முதல் வெற்றி. ஈராண்டுகளுக்கு முன் 28.5 மில்லியன் பவுண்டு கொடுத்து சிட்டியால் வாங்கப்பட்ட நிக்கலஸ் ஓட்டமெண்டி அக்குழுவின் முதல் கோலை அடித்தார். ரஹீம் ஸ்டெர்லிங், ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் அக்குழுவின் அடுத்த இரு கோல்களை அடித்தனர். இம்மூன்று கோல்களிலும் கெவின் டி பிரய்னவின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியால் குழுவின் ஆஸ்கர் ஒரு கோலை அடித்து முன்னிலை யைக் குறைத்தார். ஆயினும், இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களம் புகுந்த சிட்டியின் இளம் வீரர் பிராஹிம் டயஸ் அற் புதமான ஒரு கோலைப் போட்டு, கோல் வித்தியாசத்தை மீண்டும் மூன்றாக உயர்த்தினார். கடந்த வாரம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடனான நட்பு முறை ஆட்டத்தில் சிட்டி கோல் காப்பாளர் எடர்சன் சொதப்பிய தால் அக்குழு தோற்க நேர்ந்தது. ஆயினும், ரியால் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் அவரது செயல்பாடு அருமையாக இருந் தது. இஸ்கோ, பென்சிமா, கேஸ்மிரோ ஆகியோர் வலையை நோக்கி உதைத்த பந்துகளை அவர் பாய்ந்து தடுத்து, ரியாலின் கோல் முயற்சிகளை நொறுக்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon