முதல் டெஸ்ட்: இலங்கை அணி திணறல்

காலே: இருவர் சதமும் இருவர் அரை சதமும் அடிக்க, இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்சில் 600 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து பந்தடிக்கத் தொடங் கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங் களை எடுத்து தடுமாறி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுவதற் காக விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் காலே விளையாட்டரங் கில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 167 பந்து களில் 190 ஓட்டங்களை விளாசி னார். மூன்றாவது வீரராக வந்த புஜாராவும் சதம் அடிக்க, இந்திய அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங் களை எடுத்திருந்தது.

வெளிநாட்டு அரங்கில் ஒரே நாளில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுதான். நேற்று இரண்டாம் நாளில் 153 ஓட்டங்களை எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். ரகானே 57 ஓட்டங்களையும் அஸ்வின் 47 ஓட்டங்களையும் எடுத்தனர். இப்போட்டியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்த ஹார்திக் பாண்டியா தனது முதல் இன்னிங்சிலேயே அரை சதம் விளாசினார். 49 பந்துகளில் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சருடன் 50 ஓட்டங்களைக் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 600 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டு களையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் நுவான் பிரதீப் ஆறு விக்கெட்டுகளையும் லகிரு குமார மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதற்குமுன் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தும் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கத்தை இந்திய அணியுடனான முதல் போட்டியில் தீர்த்துக்கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

(இடமிருந்து) மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் சயட் சடிக், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ.

25 May 2019

மான்செஸ்டர் சிட்டி குழு உரிமையாளரின் மலேசிய முதலீடு

லண்டனில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் அணிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து 

நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் பாகிஸ்தான் 

அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமதுவும். படம்: ஆண்ட்ரூ போயர்ஸ்

25 May 2019

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து 

மகேந்திர சிங் டோனி. படம்: ஏஎஃப்பி

25 May 2019

சச்சின்: டோனி ஐந்தாவது  வரிசையில் ஆட வேண்டும்