கோலாலம்பூர் கடையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா: மலேசி யாவில் உள்ள மோட்டார் சைக்கிள் கடையில் தீ மூண்டதில் அங்குள்ள வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. செராசில் உள்ள மோட்டார் சைக்கிள் கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் எவரும் காயம் அடையவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த பி. ஷங்கர், மனைவியுடன் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார். என்ன நடந்தது என்று வெளியே சென்றுப் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் கடை எரிந்து கொண்டிருந்தது என்று அவர் சொன்னார். இந்தத் தீ விபத்து காரணமாக அருகில் இருந்த கடைக்காரர்கள் வெளியேற்றப் பட்டனர். மேலும் பேசிய திரு ஷங்கர், அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது என்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிளை அகற்ற உரிமையாளர்கள் ஓடினர் என்றும் சொன்னார். ஆனால் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Loading...
Load next