கேளிக்கை சந்தை விபத்தில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

சிகாகோ: அமெரிக்காவின் ஒஹையோ மாநில கேளிக்கை சந்தையில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். “கேளிக்கை சந்தைகளில் இதுவரை நேராத மோசமான விபத்து இது,” என்று வருணித்த ஓஹையோ ஆளுநர் ஜான் காசிச், “அனைத்து கேளிக்கை இயந்திரங்களையும் நிறுத்த உத்தரவிட்டார். பக்கவாட்டில் ஊசலாடும் கேளிக்கை சாதனத்தில் விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் காயம் அடைந்தனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மாண்டார். படம்: டுவிட்டர்