திருநங்கைகளுக்கு டிரம்ப் தடை, சிக்கலில் வெள்ளை மாளிகை

வா‌ஷிங்டன்: ராணுவத்தில் திரு நங்கைகள் சேவையாற்றுவதற்கு அதிபர் டிரம்ப் விதித்த தடையை அமலாக்குவதில் வெள்ளை மாளிகை சிக்கலை எதிர்நோக்கு கிறது. ஆனால் அதிபரின் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் முடிவு செய்யவில்லை. சீனாவுடன் கூட்டு: ஆசியானுடன் ஆலோசனை நடத்த மணிலா முடிவு மணிலா: தென் சீனக் கடலின் பிரச்சினைக்குரிய பகுதிகளில் சீனாவுடன் எந்தவொரு எண் ணெய், எரிவாயுத் திட்டத்தில் பங் கேற்பதற்கு முன்பு அண்டை ஆசி யான் நாடுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று பிலிப் பீன்ஸ் நேற்று உறுதி கூறியது.

"அது, ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாக இராது. அமை தியும் நிலைத் தன்மையுமே பிலிப் பீன்ஸ் அதிபரின் முன்னுரிமை. ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை நிலைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆலன் கேயெடானோ தெரிவித்தார். இந்த வட்டாரத்தின் நிலைத் தன்மையைக் கட்டிக்காக்க விரும் புவதால் ஆசியான் நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மணிலாவும் பெய்ஜிங்கும் கோட்பாடுகளைக் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இது குறித்து மேலும் ஆராயப் படும்," என்றார்.

பிலிப்பீன்சுக்கு வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிரச்சினைக்குரிய கடற்பகுதியில் பிலிப்பீன்சுடன் கூட்டாகச் சேர்ந்து எண்ணெய், எரிவாயு கண்டறிய சீனா தயாராக உள்ளதாகத் தெரி வித்தார். இதற்கு மறுநாளே பிலிப் பீன்ஸ் இவ்வாறு கூறியுள்ளது. அவசர உதவி ஹெலிகாப்டரின் விமானி வேலையை இளவரசர் வில்லியம் கைவிட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் இளவரசர் வில்லியம், 2006 முதல் 2013 வரை பிரிட்டன் ஆயுதப் படையில் பணியாற்றி யவர்.

இந்த விவகாரத்தில் தற்காப்பு அமைச்சுடன் வெள்ளை மாளிகை செயல்படும் என்று அதன் பேச் சாளர் சாரா சான்டெர்ஸ் நேற்று தெரிவித்தார். கடந்த புதன்கிழமை அன்று திரு டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் அறிவிப்புக்கு பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமெரிக்க ராணுவத்தில் திரு நங்கைகள் சேவையாற்றுவதை அமெரிக்க அரசாங்கம் அனுமதிக் காது என்று டோனல்ட் டிரம்ப் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். "நமது ராணுவம் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். ராணுவத்தில் திரு நங்கைகளால் ஏற்படும் பெரும் மருத்துவ செலவுகள் ராணு வத்துக்குச் சுமையாக அமைந்து விடக் கூடாது," என்றும் அதிபர் திரு டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே போர் முனை யில் உள்ள திருநங்கைகள் உடன டியாக திரும்ப அழைத்துக் கொள் ளப்படுவார்களா? என்ற கேள்விக் குப்பதில் அளித்த பேச்சாளர் சாரா சாண்டெர்ஸ், "இது குறித்த கொள்கைகள் வகுக்கப்பட வேண் டியுள்ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!