ஜோகூரில் பாலியல் பலாத்காரம் அதிகம்

ஜோகூர்: மலேசியாவிலேயே ஜோகூரில்தான் அதிக எண்ணிக் கையிலான பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரையில் மொத்த சம்பவங்களில் 2,089 அல்லது 15.73 விழுக்காடு ஜோகூரில் நடைபெற்றுள்ளது. அதே சமயத்தில் தகாத உறவு தொடர்பான சம்பவங்களில் சாபா முன்னிலை வகிக்கிறது. இத்தகைய மொத்த சம்பவங் களில் 263 அல்லது 14.64 விழுக்காடு சாபாவில் நடை பெற்றுள்ளன. மாதர், குடும்ப, சமூக மேம் பாட்டு அமைச்சர் ரோஹானி அப் துல் கரிம் நேற்று நாடாளு மன்றத்தில் இந்தப் புள்ளி விவ ரங்களை வெளியிட்டார்.

சிலாங்கூரில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சம்ப வங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதாவது இத்தகைய 235 சம் பவங்கள் அல்லது 20.39 விழுக்காடு இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு சம்பவங்கள் ஆகும். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் 2,244 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்களே அதிகம் ஈடுபட்டுள்ளதாக புள்ளி விவ ரங்கள் மூலம் தெரிய வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக உள்ளனர். காவல்துறை புள்ளி விவரங் களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரோஹானி, இதே காலகட்டத்தில் மொத்த பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் 13,272 என்றும் தகாத உறவு 1,796 சம்பவங்கள் என்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு 1,152 சம்பவங்கள் என்றும் பாலியல் வன்முறை சம் பவங்கள் 6,014 என்றும் தெரி வித்தார். அம்பாங் பிகேஆர் நாடாளு மன்ற உறுப்பினரான சுரைடா கமாருடின் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ரோஹானி பதில் அளித்தார்.