சிங்கப்பூரின் 50 செல்வந்தர்களின் சொத்து 11% அதிகரித்துள்ளது

இவ்வாண்டின் சிங்கப்பூர் செல்வந்தர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூரின் 50 செல்வந்தர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் செல்வம் 11% வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்தமான பொருளியல் சூழ் நிலையிலும் அந்தச் செல்வந்தர்களின் சொத்தின் கூட்டு மதிப்பு US$104.6 பில்லியனாக (S$141.9 பில்லியன்) அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் மிகப்பெரிய சொத்துச்சந்தை மேம்பாட்டாளர் களான ‘ஃபார் ஈஸ்ட்’ நிறுவனத்தின் திரு ராபர்ட் இங், பிலிப் இங் சகோதரர்கள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு US$8.6 பில்லியனாக இருந்த இவர் களின் சொத்தின் கூட்டு மதிப்பு US$9.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஃபேஸ்புக் இணையத் தளத்தின் இணை நிறுவனர் எட்வர்டோ சவரின் உள்ளார். அவரது சொத்து மதிப்பு US$9.3 பில்லியன்.

Loading...
Load next