சுடச் சுடச் செய்திகள்

உடற்குறை உள்ளோருக்கு மலிவான டாக்சி கட்டணங்கள்

உடற்குறை உள்ளோருக்கான டாக்சி மானியத் திட்டத்தையும் வாகன நிறுத்துமிட முத்திரை திட்டத்தையும் மேம்படுத்துவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது. ஆகஸ்ட் 1 முதல், $2,600 வரையிலான மாதாந்தர தனிநபர் சராசரி வருமானம் கொண்ட குடும்பங்கள், தங்களது வருமான அளவைப் பொறுத்து, 80% வரை டாக்சி மானியம் பெறலாம். தற்போ தைய $1,800 சராசரி வருமானத் தைவிட இது அதிகம். வருமான வரம்பு உயர்த்தப்படுவதால், அதிக மானோர் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி களும் திட்டத்திற்குத் தகுதி பெறு வார்கள். அவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இயலாது என மருத்துவச் சான்று பெற்றிருக்கவேண்டும் அல்லது வேலைக்கோ பள்ளிக்கோ செல்ல முற்றிலும் டாக்சிகளையே நம்பி யிருக்க வேண்டும். உடற்குறை உள்ளோருக்கு 50% வரை மானியம் வழங்க 2014ல் டாக்சி மானியத் திட்டம் தொடங்கப்பட்டது.

“டாக்சி கட்டணங்கள் அதிக விலையாக இருக்கக்கூடும். இந்த மானியம் செலவைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில், எங்களி டம் உதவி பெறுவோரில் பலரும் குறைந்த வருமானம் ஈட்டுபவர் கள்,” என உடற்குறையாளர் சமூக நலச் சங்கத்தின் உதவிப் போக் குவரத்து நிர்வாகியான 53 வயது திருவாட்டி ஐவி சியா கூறினார். சங்கத்தில் உதவி பெறுவோர் நட மாட்டக் கட்டுப்பாடுகளின் காரண மாகப் பொதுவாக வரவேற்பாளராக அல்லது எழுத்தராக வேலை செய் வதாகவும் அவர் கூறினார்.

உடற்குறையுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கான வெவ்வேறு வகையான கார் நிறுத்தும் முத்திரை வில்லைகள். இவை கார் கண்ணாடிகளில் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். படம்: எஸ்ஜி எனேபல்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon