லஞ்சம் பெற்ற ஆய்வாளர் கைது: கிராம மக்கள் கொண்டாட்டம்

கடலூர்: பொது மக்களிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய் வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார். இதை பொது மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். விருத்தாசலத்தை அடுத்துள்ள மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் தமிழ்மாறன். இவர் வழக்குகளை முன் வைத்து பலரிடம் லஞ்சம் வாங்கி உள்ளார். இந்நிலையில், சிறுவம்பார் கிரா மத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ப வரை அடிதடி வழக்கில் இருந்து விடு விக்க, ஆய்வாளர் தமிழ்மாறன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் அளித்தார் கோவிந்தராஜ். அவர்களது அறிவுறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் ஆய்வாளர் தமிழ்மாறனிடம் முதல் கட்டமாக ரூ.20 ஆயிரம் தருவதாக அவர் தக வல் தெரிவித்துள்ளார். அந்த லஞ்சப் பணத்தை பெற்ற போது, தமிழ்மாறனை லஞ்ச ஒழிப்புப் போலிசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இத்தகவலை அறிந்த கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு கூடி மேளதாளத்துடன் தமிழ்மாறன் கைதானதை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். இதற்காக கிராம மக்கள் 16 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon