சுடச் சுடச் செய்திகள்

கொசுக்களை விரட்ட நொச்சிச் செடிகள் விநியோகம்

சென்னை: பருவ மழைக் காலத் துக்குப் பின்னர் தமிழகத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது வழக்கம். போதாத குறைக்கு ஏற்கெனவே தமிழகத் தில் டெங்கி பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொசுக்களை விரட்ட தமிழகம் முழுவதும் வீடுதோறும் நொச்சிச் செடி களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மண்ணிவாக்கம் ஊராட்சியில் சிறுசிறு பைகளில் நொச்சிச் செடி குச்சிகளைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மக்கள் பயன்படுத்தும் கொசு விரட்டிகளால் பல் வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். ஒரே ஒரு கொசுவர்த் திச் சுருள் எரியும் போது அதில் இருந்து வெளிப் படும் சாம்ப லின் அளவானது 75 முதல் 137 சிகரெட்டுகளை எரிப்பதற் குச் சமம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டியடிக்க, நொச்சிச் செடி கள் கைகொடுக்கும் என அரசு தெரிவித்துள்ளது. நொச்சிச் செடிகளை தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது தமிழக அரசு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon