சுடச் சுடச் செய்திகள்

மன்னிப்பு கோர வலியுறுத்தி அதிகாரி ரூபாவுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: பெங்களூரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் கர்நாடகா சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா. சிறைத்துறை டிஜிபியாக பதவி வகித்த சத்யநாராயணராவ், சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி பெற்றதாகவும் ரூபா பகிரங்கமாக சாடியிருந்தார். இது குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட, சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் மீது ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறி இருப்பதாக தெரிவித்துள்ள சத்யநாராயணராவ், இதற்காக ரூபா மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இல்லையெனில் ரூ.50 கோடி கேட்டு ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸ் மூலம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon