சுடச் சுடச் செய்திகள்

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஸ்கூலிங்

புடாபெஸ்ட்: ஹங்கேரியின் தலை நகர் புடாபெஸ்ட்டில் உலக வெற்றி யாளர் நீச்சல் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் 51.21 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார். அவர் நான்காவது அனைத்து வகை போட்டிகளையும் கடந்து அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறிச் சென்றுள்ளார். இன்று மாலை நடைபெறவிருக் கும் அரை இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் இன்னொரு வீரரான குவா ஸெங் வென், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி போட்- டியில் 52.13 விநாடிகள் எடுத்துக் கொண்டார். அதன்காரணமாக அவர், அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்டார். இந்தப் போட்டியில் அதிவேக மாக நீந்தி சாதனை படைத்தவர் அமெரிக்காவின் செலெப் ட்ரெ செல். நூறு மீட்டர் வண்ணத்துப் பூச்சிப் பாணி நீச்சலில் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 50.08 விநாடிகள்.

போட்டிகளுக்குப் பின் செய்தி யாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூலிங், “இந்தப் போட்டியைக் காட்டிலும் நான் கலந்துகொள்ளவிருக்கும் அரை யிறுதிப்போட்டிதான் மிகவும் முக்கியமான போட்டி,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon