பயர்ன் மியூனிக்கை பந்தாடிய இன்டர் மிலான்

யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதியோர் வாக்குக்கு இணங்க காற்பந்தில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண் டுள்ள பயர்ன் மியூனிக் குழு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத் துலக வெற்றி யாளர் கிண்ணப் போட்டி ஒன்றில் இத்தாலியின் இன்டர் மிலான் குழுவிடம் தோல்வியைத் தழுவி யது. தற்காப்பு ஆட்டத்தில் பெயர் பெற்ற இத்தாலியர்கள் மின்னல் வேகத்தில் இரு முறை எதிர்த் தாக்குதல் நடத்தியதில் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்- குள் 2 கோல் போட்டு பயர்ன் மியூனிக்கின் தோல்வியை உறுதி செய்தனர். லூசியானோ ஸ்பாலெட்டியின் சிறப்பான ஆட்டத்தில் மிகுந்த தன் னம்பிக்கையுடன் பயர்ன் மியூனிக் மீது எதிர்த்தாக்குதல் நடத்திய இன்டர் மிலான் குழு, பிரேசிலில் பிறந்து தற்பொழுது இத்தாலிய நாட்டுக்காக விளையா- டும் எடேர் மூலம் இரு கோல்களைப் போட்டு பயர்ன் மியூனிக்கை வீழ்த் தி யது. அவரது முதல் கோல் ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்தி- லேயே வந்தது குறிப்பிடத்தக்கது.