பி.வி.சிந்துவுக்கு துணை ஆட்சியர் பணி

அமராவதி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை ஆட்சியர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று முன்தினம் தனது பெற் றோருடன் தலைமைச் செயலகத் துக்குச் சென்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார். அப்போது அவருக்கு துணை ஆட்சியர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Load next