ஒபாமா திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி

வா‌ஷிங்டன்: ‘ஒபாமா கேர்’ எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்யும் மசோதா செனட் சபையில் தோல்வி அடைந்தது. செனட் சபையில் குறைந்தது குடியரசுக் கட்சி எம்பிக்கள் ஜான் மெக்கெய்ன், சூசன் கோலின்ஸ், லிசா முர்கோசிகி ஆகிய மூவரும் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அந்த மசோதாவுக்கு ஆதரவாக 49 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். ஒபாமா மருத்துவக் கவனிப்புத் திட்டத்தை ரத்து செய்ய மூன்றாவது முறையாக மேற் கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி யில் முடிந்ததைத் தொடர்ந்து இது ஏமாற்றத்தைத் தருவதாக செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனல் கூறினார். செனட் சபையில் அந்த மசோதா வாக்கெடுப்பிற்கு வரு வதற்கு முன்பு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் மெக் கெய்னிடம் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.

ஆனால் திரு மெக்கெய்ன் பின்னர் ஜனநாயகக் கட்சியினரை அணுகியதாகக் கூறப்பட்டது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக் காவில் ஏழை எளிய மக்களும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கான மசோதாவில் அவர் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி கையெழுத் திட்டார். இந்தக் காப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் சாதாரண மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

அமெரிக்காவில் ஏராளமான மக்கள் இந்தத் திட்டத்தால் பலன் அடைந்து வரு கின்றனர். ஆனால் அமெரிக் காவின் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப், இத்திட்டத்திற்கு பெருமளவு நிதி செலவாகிறது என்று கருதுகிறார். இதனால் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய மருத்துவ கவனிப்புத் திட்டத்தை கொண்டு வர திரு டிரம்ப் விரும்புகிறார். திரு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்ற பிறகு அவர் கையெழுத்திட்ட முதல் உத்தரவு ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்