மனைவியைக் கொன்றதாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

வா‌ஷிங்டன்: கப்பலில் சென்று கொண்டிருந்தபோது மனைவி யைக் கொலை செய்ததாக அமெரிக்கர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “என்னைப் பார்த்து சிரிப்பதை என் மனைவி நிறுத்தவே இல்லை. அதனால் தான் நான் என் மனைவியைக் கொலை செய்தேன்,” என்று அந்த அமெரிக்கர் அந்தக் கப்பலில் இருந்தவர்களிடம் கூறியிருக் கிறார். அலாஸ்கா அருகே உள்ள கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை மனைவியைக் கொலை செய்ததாக கென்னத் மன்ஸான ரஸ் என்ற அமெரிக்கர் மீது கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. சியேட்டலிருந்து புறப்பட்ட ஓர் உல்லாசக் கப்பலில் அத் தம்பதியர் தங்கள் பிள்ளை களுடன் பயணம் செய்தபோது எதிர்பாராத அந்த துயரச் சம்பவம் நடந்தததாக சிபிஎஸ் செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தால் ஏற்பட்ட சண்டை மனைவியின் உயிரைப் பறித்தது. தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் திருவாட்டி மன்ஸானரஸ் விழுந்து கிடந்ததாக கப்பல் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். மனைவி யின் சடலத்தை கணவர் இழுத்துச்செல்வதைக் கப்பல் பயணிகள் பலர் பார்த்திருக் கின்றனர். அவரை போலிசார் பின்னர் கைது செய்தனர்.