இந்தியா: 30% ஓட்டுநர் உரிமங்கள் போலி

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30% போலியானவை என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார். வாகனத் துறை ஆண்டுக்கு 22% வளர்ந்து வரும் அதே வேளையில் கடந்த மூன்றாண்டு களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் 4% அதிகரித்து இருப்பதாக அமைச்சர் கூறினார். நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 400,000 சாலை விபத்துகள் நிகழ் வதாகவும் அவற்றில் 150,000 பேர் மரணமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். சாலைப் பயணத்தைப் பாது காப்பானதாகச் செய்து, சாலை விபத்துகள் மூலம் நிகழும் மர ணங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். இந்தியாவிலேயே முதன்முறை யாக பாலங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இம்மாதம் 21ஆம் தேதி வரை, சிறுபாலங்கள் உட்பட 126,233 பாலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அவற்றில் 147 பாலங்கள் படுமோசமான நிலையில் இருப்பது தெரியவந்த தாகவும் அவர் விவரித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon