காசாளர் இல்லா கடை திறப்பு; ரொக்கமின்றி பொருள் வாங்கலாம்

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் அமைந்துள்ள ‘சியர்ஸ்’ அங்காடி யில் அதன் மற்ற அங்காடிகளில் இருப்பதைப் போலவே எல்லாம் இருந் தாலும் காசாளர், உதவியாளர் என ஊழியர் யாரும் இருக்கமாட்டார்கள். முழுக்க முழுக்க அந்தக் கல்வி நிலைய மாணவர்களால் நிர்வகிக்கப் படும் அந்த அங்காடியில் குறைந்தது பத்துக் கண்காணிப்புப் படச்சாதனங் கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த அங்காடிக்குள் நுழைய வாடிக்கையாளர்கள் ‘ஷாப் இட் யுவர் செல்ஃப்’ எனும் கைபேசிச் செயலியில் காணப்படும் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். கடையினுள் நுழைந்ததும் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும். அத்துடன், நெட்ஸ், கடனட்டை, ஈஸி=லிங்க் அட்டை, கைபேசி வழி, தொடர்பில்லா பணம் செலுத்துதல் என ரொக்கமில்லாமல் பணம் செலுத் தும் பல்வேறு முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுயசேவை சாதனமும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன் படுத்தி ‘நெட்ஸ்’ வழி பணம் செலுத் தும் முறையை அறிமுகம் செய்துள்ள முதல் ‘சௌகரிய’ அங்காடி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. புதிய வழியில் பணம் செலுத்தும் அம்முறையில் டிபிஎஸ் பேலா, ஓசிபிசி பே எனிஒன், யுஓபி மைட்டி ஆகிய பணப் பரிமாற்ற வசதிகளைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஆளில்லா, ரொக்கமில்லா ‘சியர்ஸ்’ அங்காடித் திறப்புவிழாவில் கலந்துகொண்டு, அங்குள்ள தானியங்கிச் சாதனங்களின் செயல்பாட்டைக் கண்டு, கேட்டறியும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழகத்தில் ஆங்காங்கே நடிகர் கமல்ஹாசனின் உருவ பொம்மையும் உருவப்படங்களும் எரிக்கப்பட்டு வருகின்றன.

17 May 2019

கோட்சே புகழ்ச்சி; தட்டிக் கேட்ட பாரதிய ஜனதா