முக்கிய பாத்திரமாக இருசக்கர வாகனம்

இருசக்கர வாகனம் ஒன்று முக்கிய கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ள படம் ‘வண்டி’. இதில் விதார்த் நாயகனாகவும் சாந்தினி நாயகியாகவும் நடிக்கி றார்கள். ரூபி பிலிம்ஸ் ஹாசீர் தயாரிக்கும் இப்படத்தை இயக்கு பவர் ரஜீஷ்பாலா. புதிதாக வாங்கிய இருசக்கர வாகனம் ஒன்று தொலைந்து போவதால், ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங் களை விவரிக்கும் படமாக உருவாகிறது ‘வண்டி’. “இளைஞன் ஒருவன், தன் தந்தையின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து வைத்து ஒரு இருசக்கர வாகனம் வாங்கு கிறான். புது காதலியும் கிடைக்க, வாழ்க்கைச் சக்கரம் மகிழ்ச்சியாக சுழன்றுகொண்டிருக்கிறது. ஒரு நாள் அந்த வாகனம் காணாமல் போகிறது. அந்த பைக்கைத் தேடி அலையும் அவனது வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற கதைக்களம் ஏற்கெ னவே ஒரு படத்தில் அமைந்திருந் தாலும், இப்படம் சற்றே வித்தி யாசமானதாக இருக்கும். “இப்படம் மூன்று தளங்களில் நடக்கும் கதையாகப் பிரிக்கப்பட் டுள்ளது. ‘ஆர்எக்ஸ் 135’ என்ற இருசக்கர வாகனம் இப்படத்தில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த வாகனம் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது.

‘வண்டி’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ள விதார்த், சாந்தினி.

Loading...
Load next