சார்மியிடம் மன்னிப்பு கேட்ட காவலர்

போதைப்பொருள் விவகாரம் குறித்து தெலுங்கு திரையுலகத்தினரிடம் நடந்து வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அண்மையில் நடிகை சார்மியை போலிசார் விசாரித்துள்ளனர். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது. தன்னை விசாரணைக்கு அழைத்து வந்தபோது காவலர் ஒருவர் தன் மீது காரணமின்றி கைவைத்ததாகப் புகார் எழுப்பியுள்ளார் சார்மி. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செல்ஃபி படம் எடுக்கவே அந்த ஆண் காவலர் அவ்வாறு நடந்துகொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் காவலர் சார்மியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் சார்மியைப் பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading...
Load next