கதிராமங்கலத்தில் பணம் தின்னும் போராட்டம்

கும்பகோணம்: எண்ணெய் நிறு வனத்தை தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரும் கதிராமங்கல மக்களின் காத்தி ருப்பு போராட்டம் 18வது நாளாக நீடித்தது. இந்நிலையில், அக்கிராம மக்கள் நேற்று முன்தினம் பணத்தை உண்ணும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு கதிரா மங்கலத்தில் உள்ள ஒஎன்ஜிசியின் குழாயில் விரிசல் ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு அங்கு உள்ள வயல்வெளிகளில் அது பரவியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கதிராமங் கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் சற்று கலவரம் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரைக் காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். அவர்களை எந்தவித நிபந்த னையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போராட்டத்தில் ஈடு பட்டவர்கள், விவசாயம் இல்லாமல் இந்த நாடு முன்னேறாது, விவ சாயத்தை ஒழித்து விட்டுப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும், அந்தப் பணத்தை சாப்பிட முடியுமா என்பதை உணர்த்தும் விதமாக இலைகளில் பணத்தை வைத்துச் சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...
Load next