தமிழ் மொழியில் பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள்

சென்னை: இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாலோசனை கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் படிப்பைத் தமிழ் வழியில் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நிலை மாணவர்களும் சிவில், இயந்திர பொறியியல் படிப்பைத் தமிழ் மொழியில் கற்க விரும்புவது குறிப்பிடத்தக்கது. இதுவரை சுமார் 100 மாணவர் கள், அண்ணா பல்கலைக்கழகத் தின் தமிழ் வழி கல்வி பொறி யியல் படிப்பில் சேர்ந்து உள் ளனர். இந்நிலையில், மிகவும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கான 9 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. “வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் இருக்கும்.

“தமிழ் வழியில் பொறியியல் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் என எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும். “ஆனால், மாணவர்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்பது மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப் பட்டிருக்காது,” என்றார் அண்ணா பல்கலைக்கழக பேரா சிரியர் ஒருவர். மேலும் முதுநிலை பொறியியல் படிப்பையும் அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு என அரசாங்க வேலைக்கான இட ஒதுக்கீடும் உள்ளது. கடந்த ஆண்டு 193 மதிப்பெண் பெற்றவர்கள், தமிழ் வழியில் பயில முன் வந்த நிலையில் இவ்வாண்டு 198 மதிப்பெண் பெற்றவர்களும் இதில் சேர்ந்துள்ளனர்.