11 கோடி ரூபாய் நில மோசடி

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தனது நிலம் வேறொவருக்கு விற்கப்பட்டதை அறிந்த நாடு திரும்பிய வெளிநாட்டு வாழ் இந்தி யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்து போலிசில் புகார் அளித்தும் மூன்று மாதங்கள் கழித்துதான் புகார் பதிவு செய்யப் பட்டதாக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் 70 வயது திரிவேலன் டிசோசா என்பவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், சென்னை கோவளம் பகுதியை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 80களில் தான் வாங்கி இருந்த 9 கிரவுண்ட் நிலத்தை விற்க முடிவு செய்த அவர் அமெரிக்காவில் உள்ள சொத்துச் சந்தை முகவரைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், இந்தியா திரும்பிய அவர் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய நிலம் போலி ஆவணங்கள் மூலம் வேறு சிலருக்கு சொந்தமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். “சொத்துச் சந்தை முகவர் கிருஷ்ணமூர்த்திதான் இதற்குக் காரணம் என்று எங்களுக்குத் தெரியும்.

“அவர் மீது போலிசில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தோம். ஆனால் மூன்று மாதங்கள் கழித்துதான் புகார் பதிவு செய்யப்பட்டது. “போலிசாரும் முகவருக்கு ஆதரவாக எங்களிடம் குறைந்த விலைக்கு நிலத்தை விற்று விடும்படி பேரம் பேசினர். “ஆனால், அவர்கள் குற்றவாளி களை கைது செய்ய முன்வர வில்லை, என்றார் டிசோசா. தற்போது போலிசார் கிருஷ்ண மூர்த்தி, போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக மூவர் மீது புகார் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon